சென்னையில் விஸ்வாசம் வசூல் குறைந்துள்ளதா!!

‘ விஸ்வாசம் ‘ தல நடிப்பில் ,சிறுத்தை சிவா இயக்கத்தில் நேற்று மிக பிரம்மாண்டமாய் வெளி வந்தது. இந்த படம் தமிழ் நாட்டில் அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் விஸ்வாசம், பேட்ட ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் கடும் மோதலில் திரைக்கு வந்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் விஸ்வாசம் வசூல் மிகவும் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது சென்னையில் ‘ விஸ்வாசம் ‘ முதல் நாளில் ரூ 90 லட்சத்தை மட்டுமே  வசூல் செய்துள்ளது. மேலும் பேட்ட ரூ 1.21 கோடியை வசூல் செய்து சென்னையில் ‘ பேட்ட ‘ தான் முன்னிலையில் இருக்கிறது. மேலும் சென்னையில் எதிர்பார்த்த அளவிற்கு விஸ்வாசத்தின் வசூல் இல்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Leave a Comment