உயிர்ப்பு ஞாயிறு (Easter) என்றால் என்ன?

உயிர்ப்பு ஞாயிறு என்பது, இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழா அல்லது பாஸ்கா விழா என்று அழைக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்து மக்களின் பாவங்களையும், சாபங்களையும் நோய்களையும் சுமந்து தீர்த்த தேவ ஆட்டுக் குட்டியாக, கல்வாரி சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்த தினத்தை நினைவு கூறும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. 

இந்த நாளை கிறிஸ்தவர்கள் மிக முக்கியமான நாளாக கொண்டாடுகின்றனர். இந்த நாள், 40 நாட்கள் தவக்காலம் முடிவின் போது கொண்டாடப்படுகிறது. இந்த நாள் புனித வெள்ளி தினம் கொண்டாடப்படும் நாளில் இருந்து, மூன்றாவது நாளில் கொண்டாடப்படுகிறது. 

இந்த பாஸ்கா என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்னவென்றால் ‘கடந்து போதல்’ என்று பொருள் படும். பாஸ்கா விழா என்பது இயேசுவின் சாவையும் உயிர்ப்பையும் குறிக்கும் முன்னறிவிப்பாக கருதப்படுகிறது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.