திமிங்கல உமிழ்நீர் பதுக்கல் – அதிமுக பிரமுகர் உள்பட 3 பேர் கைது!

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட ரூ.30 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சத்தை விற்க முயன்ற 3 பேர் கைது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட ரூ.30 கோடி மதிப்புள்ள திமிங்கல உமிழ்நீரை (அம்பர்கிரிஸ்) பதுக்கி வைத்து, விற்க முயன்ற அதிமுக பிரமுகர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிமுக பிரமுகர் ஈஸ்வரன் மற்றும் கேரளாவை சேர்ந்த 3 பேரை கைது செய்தது காவல்துறை.

18 கிலோ எடையுள்ள திமிங்கலத்தின் உமிழ்நீரை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றது விசாரணையில் அம்பலமானது என காவல்துறை தெரிவித்துள்ளது. திமிங்கலத்தின் உமிழ்நீர் கட்டிகளில் (ஆம்பர் கிரீஸ்) இருந்து உயர்ரக வாசனை திரவியங்கள் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், இதனை மூலப்பொருளாக பயன்படுத்தி பல்வேறு மருந்துகளும் தயாரிக்கப்படுகிறது. இதனால் திமிங்கலத்தின் உமிழ்நீருக்கு சர்வதேச சந்தையில் அதிக மதிப்பு உள்ளது. இந்த சமயத்தில், தமிழகத்தில் திமிங்கலத்தின் உமிழ்நீர் கட்டிகள் கடத்தும் கும்பல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில், தற்போது தூத்துக்குடியில் திமிங்கல எச்சத்தை விற்க முயன்ற 3 பேர் கைது செய்யப்ட்டுள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்