Categories: இந்தியா

அபிநந்தன் வாகா வழியாக இந்தியா வருகிறார்!!வரவேற்க குவியும் மக்கள்!!

  • இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை இன்று  விடுவிக்கும் என்று பாகிஸ்தான் பிரதமர் அறிவித்துள்ளார்.
  • பாகிஸ்தானில் இருந்து விடுவிக்கப்படும் விமானப்படை வீரர் அபிநந்தன் வாகா வழியாக இந்தியா வருகிறார்.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், இந்திய விமானப்படை  துணிந்து பாகிஸ்தான் எல்லை தாண்டி அங்கே இருந்த  தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பாகிஸ்தான் ராணுவம் பதிலடி தாக்குதல் கொடுக்க தொடர்ந்து முயற்சித்து F16 என்று போர் ரக விமானத்தில் தாக்குதல் நடத்த வந்த போது  இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது.

மேலும் பாகிஸ்தான் விமானத்தை விரட்டி தாக்குதல் நடத்தி இந்திய அரசு  பதிலடி கொடுத்தது. இந்த பதிலடி தாக்குதலில் இந்திய விமானம் கீழே விழுந்து விமானி அபிநந்தன் பாகிஸ்தானிடம் சிக்கி கொண்டார்.

இந்நிலையில் இந்திய விமானி அபிநந்தனை விடுவிக்ககோரி இந்தியா பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றது.இதையடுத்து இந்திய விமானி அபிநந்தன் விவகாரம் குறித்து ஓரிரு நாட்களில் முடிவெடுக்கப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிகாரபூர்வமாக தெரிவித்து இருந்தது.

 

இந்நிலையில் இது தொடர்பாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.அதில் அபிநந்தன் இன்று விடுவிக்கப்படுவார்.இம்ரான் கான் அறிவித்தவுடன் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு எம்.பி.க்கள் அனைவரும் ஒப்புதல் தெரிவித்தனர்.மேலும் பாகிஸ்தானில் உள்ள இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் நல்லெண்ண அடிப்படையில் இன்று விடுவிக்கப்படுகிறார்.இருநாடுகளிலும் அமைதி நிலவ வேண்டும் என்ற எண்ணத்தில் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை விடுவிக்க முடிவு செய்யப்பட்டது.அதேபோல் போர் முக்கியம் இல்லை, அமைதிதான் முக்கியம்.அதேவேளையில் நாங்கள் கோழை கிடையாது என்று தெரிவித்தார்.

இந்நிலையில்  பாகிஸ்தானில் இருந்து விடுவிக்கப்படும் விமானப்படை வீரர் அபிநந்தன் வாகா வழியாக இந்தியா வருகிறார். ராவல்பிண்டி ராணுவ முகாமில் இருந்து லாகூருக்கு விமானத்தில் அழைத்து வரப்படுகிறார். அபிநந்தன் லாகூரில் இருந்து சாலை மார்க்கமாக வாகா எல்லை வழியாக இந்தியா அழைத்து வரப்படுகிறார் அபிநந்தன்.

இதனால் அபிநந்தனை வரவேற்க வாகா -அட்டாரி எல்லையில் பொதுமக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைப்பதால் வாகா எல்லையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Recent Posts

‘தேங்க்ஸ் தாத்தா ஃபார் தி சப்போர்ட்’ !! 103 வயதான சிஎஸ்கே ரசிகருக்கு தோனியின் அன்பு பரிசு !

CSK old Fan  : 103 பழையமையான சிஎஸ்கே ரசிகருக்கு, சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி அவருக்கு ஒரு அன்பு பரிசை  கொடுக்கும் வீடியோவானது பார்ப்போர்…

25 mins ago

கமல்ஹாசன் ஏமாற்றிவிட்டார்! தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்த திருப்பதி பிரதர்ஸ்!

Kamal Haasan : உத்தமவில்லன் பட விவகாரத்தில் கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் புகார் அளித்துள்ளது. ரமேஷ் அரவிந்த் என்பவர் இயக்கத்தில் நடிகர்…

30 mins ago

வந்துட்டான்யா.. தமிழ்நாட்டில் நாளை முதல் கத்தரி வெயில் தொடக்கம்! ஒரு மாதம் கொளுத்தும்…

Weather Update: தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது. அக்னி நட்சத்திர வெயில் என்று சொல்லப்படும் "கத்திரி வெயில்' நாளை முதல்…

31 mins ago

எங்கள் தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை… கோவாக்சின் நிறுவனம் விளக்கம்.!

Covaxin : எங்கள் தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை என கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் சுமார் 2 வருடங்கள்…

1 hour ago

ஒரே நாளில் ரூ.800 சரிவு.. சவரனுக்கு ரூ.53,000 க்கும் கீழ் சென்ற தங்கம் விலை.!

Gold Price: தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 குறைந்ததால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…

1 hour ago

தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

Weather Update : தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி…

1 hour ago