#WeatherUpdate: வங்கக்கடலில் உருவானது ‘மோச்சா’ புயல்!

வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை புயலாக வலுவடைந்தது.

தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை ‘மோச்சா’ புயலாக உருவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ‘மோச்சா’ புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக வலுப்பெற்று பின்னர் அதி தீவிர புயலாக மாறும் என கூறப்பட்டுள்ளது.

‘மோச்சா’ என பெயரிடப்பட்டுள்ள புயல் வங்கதேசம், மியான்மர் அருகே நிலை கொண்டுள்ளது. மே 14ம் தேதி ‘மோச்சா’ புயல் வங்கதேசம் – மியான்மர் இடையே புயல் கரையை கடக்கும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதால் கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனே கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர். புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் மணிக்கு 110 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்தி வீசக்கூடும். இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக எனவும் கூறப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்