நாம் அனைவரும் சமம் என உரக்க முழங்குவோம்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

விளிம்புநிலை மக்களுக்காக நான் இருக்கிறேன் என முதலமைச்சர் முக ஸ்டாலின் ட்வீட்.

திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயிலில் உள்ள நரிக்குறவர் குடியிருப்புக்கு சென்று மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் மற்றும் சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதன்பின் ஆவடி அருகே நரிக்குறவர் குடியிருப்பு பகுதிக்கு சென்ற முதலமைச்சர், மாணவிகளுடன் கலந்துரையாடினர். அப்போது, நரிக்குறவ மாணவி இல்லத்தில் முதலமைச்சர் இட்லி, வடை உள்ளிட்ட காலை சிற்றுண்டி அருந்தினார். மேலும் நரிக்குறவ மாணவிக்கு இட்லி ஊட்டிவிட்டு மகிழ்ந்தார்.

இந்த நிலையில், தற்போது இதுதொடர்பாக முதலமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எங்க வீட்டுக்கு வந்து சாப்பிடுங்க என்ற தங்கை திவ்யாவின் அழைப்பை ஏற்று, அவரது வீட்டிற்குச் சென்று சாப்பிட்டேன். விளிம்புநிலை மக்களுக்காக நான் இருக்கிறேன், நமது இயக்கம் இருக்கிறது என்ற நம்பிக்கையை அவர்களுக்கும் உள்ளது. பாசத்தோடு பரிமாற தமிழ்நாட்டையே உறவாகப் பெற்றுள்ள மகிழ்வை எனக்கும் தருகிறது. சமத்துவமும் சமூகநீதியும் நம் பாதை. இந்த திராவிட மாடலில் அன்பை விதைப்போம்! நாம் அனைவரும் சமம் என உரக்க முழங்குவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்