“கல்விக்கென தனி வானொலி தொடங்க வேண்டும்” – ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்

கல்விக்கென தனி வானொலி தொடங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒளி உமிழும் திரையைத் தொடர்ச்சியாகப் பார்த்துக்கொண்டும். ஹெட்செட்டுகளை நெடுநேரம் காதில் மாட்டிக்கொண்டும் இருப்பதால் மாணவர்களின் கண்பார்வை, செவி கேட்கும் திறனில் பிரச்னை ஏற்படுகிறது என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

தலைவலி, கண் எரிச்சல், கண்களைச் சுற்றி கருவட்டம், சரியான தூக்கமின்மை போன்ற ஆன்லைன் வகுப்புகளின் விளைவுகளை எல்லா குடும்பங்களும் எதிர்கொள்கின்றன. இதற்கு வானொலி சிறந்த மாற்றாக இருக்க முடியும். இதன் மூலம் ஸ்க்ரீன் டைம் கணிசமான அளவு குறைக்க முடியும்.

கல்வித் தொலைக்காட்சி போல தமிழக அரசு கல்விக்கென தனி வானொலி அல்லது பண்பலை வரிசை தொடங்கலாம். திறன்பேசி, மடிக்கணினி, தடையற்ற இணையம் ஆகியவற்றிற்காகச் சிரமப்படும் மாணவர்களுக்கும் இது பயனளிக்கும். கடலூர் மாவட்டம், அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஆ.கார்த்திக்ராஜா தன் மாணவர்கள் மீதான தனிப்பட்ட அக்கறையினால் ஒரு இணைய ரேடியோவை (www.kalviradio.com} உருவாக்கியுள்ளார்.

2ஜி இணைய வசதி மட்டுமே கொண்டிருக்கும் கிராமப்புற ஏழை மாணவர்களை மனதில் வைத்து இந்த முயற்சியை முன்னெடுத்திருக்கிறார். தமிழகம் முழுக்க தன்னார்வம் கொண்ட சுமார் 75 ஆசிரியர்கள் ஒன்றிணைந்து இதைச் செம்மையாக நடத்தி வருகிறார்கள். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இவர்களால் பயன்பெற்று வருகின்றனர்.

பெரிய முதலீடு, தொழில்நுட்பம் தேவையின்றி தங்கள் மாணவர்கள் மீதான அன்பினாலேயே இதைச் சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள். ஒரு மாணவருக்கு வகுப்பிற்கென நாள் ஒன்றிற்கு அதிகபட்சம் 300mb டேட்டாதான் இதற்குத் தேவைப்படுகிறது. ஆசிரியர் கார்த்திக் ராஜாவும் அவரது சக ஆசிரியர்களும் பாராட்டுக்கு உரியவர்கள்.

இந்தக் கல்வி ரேடியோ தளத்தினை இதுவரை 3,20,000 தடவைக்கு மேல் பயன்படுத்தப்பட்டுள்ளதும், 14,500 மணி நேரங்களுக்கு மேல் இயக்கப்பட்டுள்ளதுமே இதன் தேவைக்கான அத்தாட்சி. தனி முழுநேர வானொலி உருவாக்கப்படுமானால், ஏழை எளிய மாணவர்களுக்கு மிகப்பெரிய வசதியாக இருக்கும்.

மேலும், இதர மாணவர்களுக்கும் தங்களது ஸ்க்ரீன் நேரத்தைக் குறைத்துக்கொள்ள உதவும் என்றும் தமிழக அரசு இதைப் பரிசீலிக்க வேண்டுகிறேன் எனவும் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

IPL2024: தொடர் தோல்வியில் மும்பை.. கொல்கத்தா அபார வெற்றி….!

IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

6 hours ago

‘செட்டில் ஆகிவிட்டு அடிங்க ..’ ! டி20யின் மாற்றத்தை ஆராயும் ரிக்கி பாண்டிங் !

Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…

10 hours ago

நெல்சனின் முதல் தயாரிப்பு.. வித்தியாசமான லுக்கில் கவின்.! கவனம் ஈர்க்கும் ப்ரோமோ வீடியோ!

Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…

10 hours ago

இந்தியாவை பின்னுக்கு தள்ளிய பேட் கம்மின்ஸ் ! ஐசிசி தரவரிசையில் ஆஸி. கிரிக்கெட் அணி நம்பர் 1 !!

ICC Ranking  : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…

10 hours ago

20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி காங்கிரஸ் தோல்வி.! அமித்ஷா கடும் விமர்சனம்.!

Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…

10 hours ago

வேட்டையன் படப்பிடிப்பில் கோட் சூட்டில் கலக்கும் சூப்பர் ஸ்டார்கள்! வைரல் க்ளிக்ஸ்…

Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…

11 hours ago