எல்லை பிரச்னையில் நாங்கள் உதவ தயார்- டிரம்ப்!

இந்தியா-சீனா இடையிலான எல்லை பிரச்னையில் நாங்கள் உதவ தயார் என அமெரிக்கா அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில், திங்கட்கிழமை இரவு இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. மேலும் சீன ராணுவ தரப்பில் சுமார் 43 வீரர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர் அதில் பலர் உயிரிழந்திருக்க கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து இந்தியா-சீன வெளியுறவு துறை அமைச்சகம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதுமட்டுமின்றி, இதற்க்கு முன்னர் ராணுவ தரப்பில் பலமுறை பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், அந்த பேச்சுவார்த்தை பெருமளவில் பயனளிக்கவில்லை.

இந்நிலையில், இந்தியா-சீனா எல்லை பிரச்சனை தொடங்கியபோதே மத்தியஸ்தம் செய்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். அதனை இருநாடுகளும் நிராகரித்தது. மேலும், அமெரிக்காவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரம் தொடங்கும் முன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், இந்தியா-சீனா இடையான பிரச்னையின் நிலைமைகள் குறித்து நாங்கள் கண்காணித்து வருகின்றோம் எனவும், இருநாடுகளும் பலத்த சேதங்களை சந்தித்து உள்ளதாகவும், அவசியமானால் அவசியம் உதவுவோம் என தெரிவித்தார்.