முல்லை பெரியாறு அணையில் இருந்து நீர் திறப்பு!

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 137.5 அடியை எட்டியுள்ள நிலையில், கேரளாவிற்கு உபரி நீர் திறப்பு.

முல்லை பெரியாறு அணையில் இருந்து நீரை திறக்கக் கோரி முதல்வர் முக ஸ்டாலினுக்கு, கேரளா முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதிருந்தார். முல்லை பெரியாறு அணை 137 அடியை கடந்த நிலையில், படிப்படியாக நீரை இப்போதிலிருந்தே திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், முல்லை பெரியாறு அணையில் இருந்து கேரளாவிற்கு உபரி நீர் திறக்கப்பட்டது. முல்லை பெரியாறு அணையில் இருந்து கேரளாவிற்கு வினாடிக்கு 534 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. 13 மதகுகளில் 4 மதகுகள் வழியாக மட்டுமே உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. தமிழகத்திற்கு அதிக அளவு நீர் வெளியேற்றியும், நீர்வரத்து அதிகமாக இருப்பதால் கேரளாவிற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment