தூத்துக்குடியில் மருத்துவமனை வளாகத்தில் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்து .!நூலிழையில் உயிர் தப்பிய வாட்ச்மேன்.!

தூத்துக்குடியில் பாலத்தில் சென்று கொண்டிருந்த லாரி மருத்துவமனை வளாகத்தில்  கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இருந்து காய்கறிகளை ஏற்றிக் கொண்டு தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டிற்கு லாரி ஒன்று வந்துள்ளது .  ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான லாரியை ரமேஷ் குமார் என்பவர் ஒட்டியுள்ளளார் . மேலும் லாரியின் கிளீனராக லட்சுமணன் என்பவரும் உடன் இருந்துள்ளார் . இந்த நிலையில் இன்று அதிகாலையளவில் லாரியானது தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டிற்கு வர புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள பாலத்தில் ஏறியுள்ளது .  அப்போது லாரியை பாலத்தில் வைத்து வலது பக்கம் ஓட்டுநர் திருப்பியுள்ளார் . இதனால் நிலை தடுமாறிய லாரி பாலத்தில் இருந்து தலைக்கீழாக கவிழ்ந்துள்ளது .  தனியார் மருத்துவமனை ஒன்று லாரி கவிழ்ந்த பகுதியில் இருந்துள்ளது .

ஆனால் அதிர்ஷ்டவசமாக லாரி கவிழ்ந்த தனியார் மருத்துவமனை வளாகத்தில் மக்கள் நடமாட்டம் இல்லை. எனவே எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை . மேலும் மருத்துவனையின் வாட்ச்மேன் அறையில் இருந்து கொள்ளாமல் வெளியே அமர்ந்திருந்ததால் நூலிழையில் உயிர் தப்பினார் . மேலும் லாரி கவிழ்ந்ததில் லாரிக்குள் இருந்த லட்சுமணன் அவர்கள் காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் . மேலும் இதுகுறித்த விசாரணையை தூத்துக்குடி மத்திய பாகம் போலீசார் நடத்தி வருகின்றனர்.