எப்சம் சால்ட் பற்றிய வியப்பூட்டும் நன்மைகள் பற்றி தெரிஞ்சுக்கணுமா? அப்போ இந்த பதிவை படிங்க..!

எப்சம் உப்பு என்பது மெக்னீசியம் மற்றும் சல்பேட் கலந்த கலவையாகும் இந்த உப்பை எவற்றிக்கெல்லாம்   பயன்படுத்தலாம் மற்றும் யாரெல்லாம் பயன்படுத்தக்கூடாது என்பது பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்..

எப்சம் உப்பு இங்கிலாந்தில் உள்ள எப்சம் என்ற ஊரில் கண்டுபிடிக்கப்பட்டதால் இப்பெயர் வந்தது. இதை உப்பு என்று சொல்வதைவிட மருந்து என்று தான் கூற வேண்டும்.

எப்சம் உப்பின் பயன்கள்

அழகு நிலையங்களில் பாதங்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் இந்த உப்பு பயன்படுத்தப்படுகிறது. இதை நாம் வீட்டிலே கூட செய்து கொள்ளலாம். கால் ஸ்பூன் உப்பை வெதுவெதுப்பான நீரில் போட்டு  நம் பாதங்களை வைக்க வேண்டும் இவ்வாறு செய்தால் இதில் உள்ள மெக்னீசியம் சத்து நம் உடலுக்கு சென்று நல்ல தூக்கத்தை ஏற்படுத்தும். மேலும் மன அழுத்தம், தலை வலி போன்றவை குறையும்.

மலச்சிக்கல்

குளிக்கும்போது இந்த உப்பை 1/4 ஸ்பூன் சேர்த்து குளித்தால் தோல் வழியே  நம் உடலுக்குச் செல்லும், இந்த மெக்னீசியம் குடலுக்கு தேவையான நீர் சத்தை கொடுத்து மலத்தை வெளியேற்றும். 2 கிராம் உப்பிலிருந்தே இதன் பவர் தொடங்கும். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இந்த உப்பை நாம் வாய் வழியாக எடுத்துக் கொள்ளக் கூடாது இந்த உப்பை நாம் அளவோடு தான் பயன்படுத்த வேண்டும்.

தசைப்பிடிப்பு

விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிக வேலை செய்பவர்களுக்கு அடிக்கடி தசை பிடிப்பு ஏற்படும் இவ்வாறு இருப்பவர்கள் இந்த உப்பை பயன்படுத்தி குளித்து வந்தால் தசைப்பிடிப்பு நீங்கும் மேலும் உடல் வலி ,கை கால் வலி ஆகியவை நீங்கும்.

தவிர்க்க வேண்டியவர்கள்

குழந்தைகளும் கிட்னி பிரச்சனை உள்ளவர்களும் எப்சம் சால்டை தவிர்க்க வேண்டும் அல்லது மருத்துவரின் பரிந்துரையின் படி மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த உப்பின் அளவு ஒவ்வொருவரின் உடலுக்கும் மாறுபடும் இதனால் மருத்துவரின் ஆலோசனையின் படியே பயன்படுத்த வேண்டும். ஆகவே உடலுக்கு புத்துணர்ச்சி தரும் இந்த எப்சம் உப்பை அளவோடு பயன்படுத்தி பயனடையுங்கள்.

author avatar
K Palaniammal
நான் பழனியம்மாள், இளங்கலை மனையியல் பட்டதாரியான நான் கடந்த ஆறு மாதங்களாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். லைஃப் ஸ்டைல், ஆன்மீகம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.