வெயிட்டிங்லே வெறி ஆகுது! இன்று வெளியாகும் ‘இந்தியன் 2’ அப்டேட்?

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1996-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் இந்தியன். இந்த திரைப்படத்தின் முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக ஹிட் ஆன நிலையில், படத்திற்கான இரண்டாவது பாகத்தையும் கமல்ஹாசனை வைத்து ஷங்கர் இயக்கி இருக்கிறார்.

இந்த இரண்டாவது பாகத்தில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த்,  எஸ்.ஜே.சூர்யா, குல் ப்ரீத் சிங், டெல்லி கணேஷ், பாபி சிம்ஹா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்திற்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், படம் விரைவில் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், ‘ இந்தியன் 2 ‘ திரைப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், ரசிகர்கள் அனைவரும் படத்திற்காகவும், படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் படத்தின் பாடல்கள், டிரைலர் ஆகியவற்றிற்கு ஆவலுடன் காத்துள்ளனர்.

இதற்கிடையில், படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என முன்னதாக போஸ்டர் ஒன்றை வெளியீட்டு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அப்டேட் படத்திற்கான ரிலீஸ் தேதியாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் இருந்து ரிலீஸ் தேதி அப்டேட் வருகிறதா அல்லது ட்ரைலர் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வருகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.