உள்ளாட்சித் தேர்தல் : இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு

  • இன்று ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
  • இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் புதிதாக  மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.முதல் கட்டமாக 27 ஊராட்சி ஒன்றியங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.இதில் கட்சி அடிப்படை இல்லாமல் ஊராட்சி மன்ற  உறுப்பினர் ,ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்,மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு கட்சி அடிப்படையிலும் தேர்தல் நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ஆம் தேதி தொடங்கி கடந்த 16 -ஆம் தேதி நிறைவடைந்தது.மொத்தமாக  3,00,2994 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.இதில் 3643 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது.48,891 பேர் வேட்புமனுக்களை திரும்ப பெற்றனர்.பின்னர் வெளியிடப்பட்ட இறுதிவேட்பாளர் பட்டியலில் 18,570 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டனர்.2,31,890 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

முதற்கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெறும் பகுதிகளில் 60,000-க்கும் மேற்பட்ட போலீசார்,முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ஊர்க்காவல் படையினர்  ஈடுபட்டுள்ளனர்.பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவை வீடியோ பதிவு செய்வும் ,இணையதள கண்காணிப்பு மூலம் கண்காணிக்க மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.