துப்பாக்கி இயக்குனருடன் இணையும் விஷால்..?

நடிகர் விஷால் அடுத்ததாக இயக்குனர் ஏ ஆர் முருகதாஸுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் விஷால் நடிப்பில் வெளியான சக்ரா திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், அடுத்ததாக விஷால் யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறார் என்ற கேள்வி எழும்பியநிலையில், தற்போது அதற்கான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரான ஏ ஆர் முருகதாஸுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. தர்பார் படத்திற்கு பிறகு  படங்கள் இயக்காமல் இருந்த முருகதாஸ் நடிகர் விஜயின் 65 படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார் ஆனால் சில காரணங்களால் நடக்கவில்லை.

அதைபோல் விஜய்க்காக அவர் வைத்திருந்த கதையில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவிருந்ததாகவும் தகவல்கள் பரவின, அங்க வகையில், தற்போது இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் நடிகர் விஷால் வைத்து படம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் மற்றோரு தகவல் விஷால் நடிக்கும் படத்தை முருகதாஸ் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.