எனது பெயரை வைத்து விசா மோசடி..! பிரிட்டிஷ் தூதர் அலெக்ஸ் எல்லிஸ் எச்சரிக்கை..!

பிரிட்டிஷ் தூதர் அலெக்ஸ் எல்லிஸ், எனது பெயரைப் பயன்படுத்தி விசா மோசடிகள் அதிகரித்து வருவதை குறித்து எச்சரித்துள்ளார்.

பிரிட்டிஷ் தூதர் அலெக்ஸ் எல்லிஸ், அவரது பெயரைப் பயன்படுத்தி விசா மோசடிகள் அதிகரித்து வருவதை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் எச்சரித்துள்ளார். அவர் பதிவிட்ட டீவீட்டில் ” எனது பெயரைப் பயன்படுத்தி விசா மோசடிகள் அதிகரித்து வருவதை நான் காண்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நடந்து கொண்டிருக்கும் மோசடியில், இங்கிலாந்தில் எளிதாக வேலை வாங்க அல்லது இங்கிலாந்து விசாவை விரைவாகவும் எளிதாகவும் பெற்றுவிடுவதற்கான வகையில் ஏதேனும் விளம்பரங்கள் தெரிந்தால் அதனை நம்பவேண்டாம் எனவும் தெரிவித்தார்.

மேலும் மோசடி செய்பவர்கள், ஆவணங்களைப் பயன்படுத்தி இங்கிலாந்துக்கு விசா தருகிறோம் என்றால் அதனை சந்தேகப்படுங்கள் என்றும் தெரிவித்தார். ஏனென்றால் ஐரோப்பாவில் உள்ள UK போன்ற நாடுகளில் நேரடி சோதனைகள் நடத்தப்பட்ட பின்னரே விசா தரப்படும்

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment