ஜூலை 6 முதல் இந்தியாவில் 9 நாடுகளுக்கான விசா விண்ணப்பிக்க அனுமதி.!

இந்தியாவில் வரும் ஜூலை 6 முதல் யுஏஇ மற்றும் 9 நாடுகளுக்கான விசா விண்ணப்பங்கள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் சர்வதேச விமான சேவைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து கடந்த மே மாதம் 25 முதல் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கப்பட்டது. ஆனால் இந்தியாவில் விமான சேவை தொடங்குவதை குறித்த எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருந்தது .

கடந்த திங்களன்று, நாட்டின் விமான சேவைகள் ஒரு கட்டமாக தொடங்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. இந்த நிலையில் தற்போது மாநில அரசுகள் மற்றும் தூதரகங்களின் கொரோனவிற்கான விதிமுறைகளை பின்பற்றி VFS குளோபல் இந்தியாவில் விசா விண்ணப்பங்களுக்கான சேவைகளை தொடங்கவுள்ளது.

அதில் பயணிகள் பெலாரஸ், டென்மார்க், டொமினிகன் ரிப்பப்ளிக், அயர்லாந்து, இத்தாலி, நோர்வே, போர்ச்சுக்கல், தென் கொரியா, துருக்கி, ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் யூனிடேட் கிங்டம் ஆகிய நாடுகளுக்கான விசா விண்ணப்பிக்க முடியும்.

குறிப்பிட்ட தூதரகங்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் ஒப்புதலின் படி VFS குளோபல் மையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளின் விண்ணப்பங்களை மட்டுமே ஏற்று கொள்கிறது. அந்த வகையில் ஜூலை 6 முதல் UK விசா சேவைகள் நாடு முழுவதும் உள்ள 11 நகரங்களில் தொடங்கப்படும் என்று விசா அவுட்சோர்சிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனவே இந்த UK விசா சேவைகள் அகமதாபாத், பெங்களூர், சண்டிகர், சென்னை, ஜலந்தர், கொச்சி, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பையில் மகாலட்சுமியிலும், புது டெல்லியில் சிவாஜி மெட்ரோ ஸ்டேடியத்திலும் மற்றும் புனே ஆகிய இடங்களில் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் துருக்கி, டொமினிகன் ரிப்பப்ளிக், தென் கொரியா, போர்ச்சுக்கல், நோர்வே, டென்மார்க் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கான விசா விண்ணப்பங்கள் புது டெல்லி மையத்தில் தொடங்கப்படும் என்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்கான விசா விண்ணப்பங்கள் ஆன்லைன்  பயன்முறையில் என்றும் கூறப்பட்டுள்ளது.

விசா விண்ணப்ப மையத்திற்கு செல்வதற்கு முன் வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் சந்திப்புகளை பதிவு செய்ய வேண்டும் என்றும், ஒவ்வொரு விசா விண்ணப்ப மையத்திலும் கட்டாய உடல் வெப்பநிலை சோதனைகள் இருக்கும் என்றும், அதிக காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் இருப்பவர்கள் மையத்திற்குள் நுழைய முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.