முதலிடத்தை பிடிக்கவேண்டும் என்றால் இதை செய்... பாண்டியாவிற்கு அறிவுரை கூறிய விராட்கோலி.!

இந்திய அணி கேப்டன் விராட் கோலி வெற்றிகரமான வீரராக திகழும் ரகசியத்தை

By bala | Published: Jun 27, 2020 06:20 PM

இந்திய அணி கேப்டன் விராட் கோலி வெற்றிகரமான வீரராக திகழும் ரகசியத்தை ஹர்திக் பாண்டியாவுடன் கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து  செல்கிறது, இந்த கொரனோ வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பள்ளிகள், கல்லூரிகள், விளையாட்டு போட்டிகள் சினிமா படங்களின் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட்கோலி பேட்டிங் பற்றி சொல்லியே தெரியவேண்டாம், மேலும் அவர் சிறந்த கிரிக்கெட் வீரராக இருப்பதன் ரகசியத்தை இந்திய கிரிக்கெட் இளம் வீரர் ஹர்திக் பாண்டியாவிடம் கூறியதாக பாண்டியா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அந்த பேட்டியில் பாண்டியா கூறியது " விராட்கோலியிடம் நான் கேட்டேன் விராட் கோலி உங்களது வெற்றியின் ரகசியம் என்ன என்று கேட்டதற்கு "விராட் கோலி என்னிடம் முதலில் எப்பொழுதும் உன்னுடைய நினைவில் நம்பர் 1 ஆக வரவேண்டும் என்பது எப்போதும் உனது நினைவில் இருக்கவேண்டும்.

மேலும் மற்றவரை கீழே தள்ளி முதலிடம் பிடிக்கும் எண்ணம் இருக்கக்கூடாது, சரியான நேர் வழியில் கடின  உழைப்பின் மூலம் நம்பர் 1 என்ற இடத்தை பிடிக்கவேண்டும் என்று விராட்கோலி கூறியதாக ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc