#viral:‘முஸ்லிம் டெலிவரி நபர் வேண்டாம்’ ஸ்விக்கி வாடிக்கையாளர் கோரிக்கை-ஆத்திரமடைந்த நெட்டிசன்கள்!

‘முஸ்லிம் டெலிவரி நபர் வேண்டாம்’, ஹைதராபாத் ஸ்விக்கி வாடிக்கையாளர் கோரிக்கை, வைரலாகும் ஸ்கிரீன் ஷாட்.

ஹைதராபாத்தில் ஸ்விக்கி வாடிக்கையாளர் ஒருவர், “ஒரு முஸ்லிம் டெலிவரி பாய் தனது ஆர்டரை டெலிவரி செய்யக் கூடாது” என்ற கோரிக்கையை ஸ்விக்கியின் இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதன் ஸ்கிரீன் ஷாட்டை தெலுங்கானா மாநில டாக்ஸி மற்றும் டிரைவர்கள் ஜேஏசியின் தலைவர் ஷேக் சலாவுதீன் என்பவர் சமூக இணைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் இந்த கோரிக்கையை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்கிடையில், இந்த சர்ச்சைக்கு ஸ்விக்கி இதுவரை எந்தவித பதிலும் அளிக்கவில்லை.

இச்சம்பம் போன்று முன்னதாக, ஹைதராபாத்தில் உள்ள ஸ்விக்கி வாடிக்கையாளர் ஒருவர் முஸ்லிம் டெலிவரி பாய் வழங்கிய உணவை ஏற்க மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Varathalakshmi

Leave a Comment