மாஸ்டர் பட டிரைலர் குறித்து விஜய் சேதுபதி.!

மாஸ்டர் படத்தின் டிரைலரை பார்த்து விட்டு விஜய் சேதுபதி, டிரைலர் சூப்பராக உள்ளது என்றும், ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.

நடிகர் விஜய், தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.இந்த படத்தை மாநகரம், கைதி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும் , சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன், தீனா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர். அனிருத்தின் இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களும் டிரெண்டிங்கில் உள்ளது. ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரவிருந்த இந்த படம் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது விஜய் ரசிகர்கள் காத்திருக்கும் ஒரே விஷயம் இப்படத்தின் ரிலீஸ் மற்றும் டீசர் தான்.

இந்த நிலையில் மாஸ்டர் படத்தின் டிரைலரை பார்த்து விட்டு விஜய் சேதுபதி கூறியதாவது, டிரைலர் மிகவும் சூப்பராக உள்ளதாகவும், கண்டிப்பாக இது ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று கூறியுள்ளார். இதிலிருந்து ரசிகர்கள் பலரும் மாஸ்டர் பட டிரைலருக்காக செம வெயிட்டிங்கில் உள்ளனர்.