வாழ் சண்டை பயிற்சியில் சியான் விக்ரம்.! பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் இருந்து வெளியான வீடியோ.!

பொன்னியின் செல்வன் படத்திற்காக நடிகர் விக்ரம்  வாழ் சண்டை பயிற்சி எடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. 

பிரமாண்ட பட்ஜெட்டில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், அர்ஜுன் சிதம்பரம், பிரபு, போன்ற பல பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள்.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு 70% விகிதம் முடிவைத்துள்ள நிலையில், கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக மீண்டும் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த மாதம் மீண்டும் படத்திற்கான படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விக்ரம் பொன்னியின் செல்வன் படத்திற்காக வாழ் சண்டை பயிற்சி எடுக்கும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

<div

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.