Video: எம்எஸ் தோனி – கிரிக்கெட் வீரரா? கடவுளா? தீவிர ரசிகையின் அந்த மரியாதை…

கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, 16-வது ஐபிஎல் தொடர் இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மாலை 7.30 மணி அளவில் தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த ஐபிஎல் தொடர் இன்று தொடங்கி, 2 மாதங்கள் நடைபெறுகிறது.

இன்று தொடங்கும் முதல் போட்டியில் சிஎஸ்கே மற்றும் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் முதலில் தோனி விளையாடவில்லை என்று கூறப்பட்ட நிலையில், பின்னர் தோனி விளையாடுவது உறுதி என சிஎஸ்கே அணியின் சிஇஓ நேற்று தகவல் தெரிவித்தார்.

இந்நிலையில், அகமதாபாத் மைதானத்திற்கு வருகை தந்துள்ள தொனியின் தீவிர ரசிகை ஒருவர், அவரிடம் புகைப்படம் எடுத்தற்காக காத்திருந்தார். அப்போது, அந்த ரசிகை அவரிடம் புகைப்படம் எடுத்து கொள்வதற்காக தனது காலணிகளை கழட்டி வைத்துவிட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இதனை ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட, அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் கிரிக்கெட் ஒரு மதம் என்றால், எம்எஸ் தோனி ஒரு தெய்வீக கடவுள்  என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Leave a Comment