வாஜ்பாய் நினைவு தினம்.. குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை.!

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் அவர்கள் கடந்த 2018 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16- ஆம் தேதி உடல் நலக் குறைவால் காலமானார். வாஜ்பாய் 10 முறை லோக்சபாவிற்கு, ராஜ்யசபாவிற்கு இரண்டு முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

வாஜ்பாய் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். மேலும், நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதும் பெற்றுள்ளார்.

இந்நிலையில், வாஜ்பாய் அவர்களின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும்  ராஜ்நாத் சிங் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

author avatar
murugan