வேல் யாத்திரை : டிசம்பர் 6-ம் தேதிக்கு பதிலாக 7-ம் தேதி நிறைவு பெறும் என அறிவிப்பு!

வேல் யாத்திரை டிசம்பர் 6-ம் தேதிக்கு பதிலாக 7-ம் தேதி நிறைவு பெறும் என அறிவிப்பு.

திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை, நவ.6ம் தேதி முதல் டிச.6ம் தேதி வரை வேல் யாத்திரை நடைபெறவுள்ளதாக பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்க்கு தமிழக அரசு சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால்,தடையை மீறி பாஜகவினர் வேல் யாத்திரை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த யாத்திரை டிச.6ம் தேதி முடிவடைவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நாள் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் என்பதால், பல்வேறு பிரச்சனைகள் என பல்வேறு தரப்பினரும் தெரிவித்தனர். இதனையடுத்து, டிச.6 தேதி வேல் யாத்திரை நிறைவு பெறுவதற்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், டிச.7ம் தேதி நிறைவு பெரறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment