முரட்டு வில்லனாக களமிறங்கும் வைகைபுயல் வடிவேலு.! ஹீரோ யாரு தெரியுமா.?

நடிகர் வடிவேலு நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். தற்போது மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் மாமன்னன் மற்றும் பி வாசு இயக்கத்தில் உருவாகி வரும் சந்திரமுகி 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Vadivelu Smile
Vadivelu Smile Image Source Twitter

இவரது நடிப்பில் இயக்குனர் சு ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. விரைவில் படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. காமெடியனாக நடித்து கலக்கி வரும் வடிவேலு இதுவரை வில்லன் கதாபத்திரத்தில் நடித்ததே இல்லை.

இதையும் படியுங்களேன்- ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டன் ஆர்வ கோளாறு.. வத்திக்குச்சி வனிதா கடும் விமர்சனம்.!

Vadivelu
Vadivelu Image Source Twitter

இதனால் பல ரசிகர்கள் வடிவேலு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தால் எப்படி இருக்கும் என பார்ப்பதற்கு ஆவலுடன் காத்திருந்த நிலையில், அதற்கான சூப்பர் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அது என்னவென்றால், ஜி வி பிரகாஷ் நடிக்கும் ஒரு திரைப்படத்தில் வடிவேலு வில்லனாக களம் இறங்கியுள்ளார்.

Vadivelu And Gv Prakash
Vadivelu And Gv Prakash Image Source Twitter

ஜிவி பிரகாஷிற்கு வடிவேலு வில்லனாக நடிக்கும் அந்த படத்தை சந்தானத்தை வைத்து ‘தில்லுக்கு துட்டு’ என்ற திரைப்படத்தை இயக்கிய ராம் பாலா இயக்குகிறார்.இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பும் விறு விறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. காமெடியன், ஹீரோவாக கலக்கி வந்த வடிவேலு தற்போது வில்லனாக களமிறங்கியுள்ளதால் இந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment