ஆர்.ஜே.பாலாஜியுடன் இணையும் வடிவேலு..?

நடிகர் வடிவேலு மற்றும் நடிகர் ஆர் ஜே பாலாஜி  ஆகிய இருவரும் இயக்குனர் திருமுருகன் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்.

தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் காமெடி மன்னனாக கலக்கி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் வைகை புயல் வடிவேலு .சில காலமாக எந்த படத்திலும் நடிக்காத இவரை சினிமாவில் பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது இவரது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி கண்ணீருடன் சென்சோற்று கடன் தீர்க்க பாடலை வருத்தத்துடன் கண்ணீருடன் பாடலை பாடிய வீடியோவும் “நீங்ள் எல்லாம் ஒரு வருடமாகதான் லாக்டவுனில் இருக்கிறீர்கள். ஆனால் நானோ 10 வருடமாக இருக்கிறேன். என் உடம்பில் இப்போதும் தெம்பும் இருக்கு எனக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளது. ஆனால் யாரும் வாய்ப்பு தருவதில்லை என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், தற்போது அணைத்து ரசிகர்களுக்கும் உற்சாகம் அளிக்கும் வகையில் சூப்பரான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. நடிகர் வடிவேல் மீண்டும் படத்தில் நடிக்கவுள்ளதாகவும் அந்த படத்தை இயக்குனர் திருமுருகன் இயக்கவுள்ளதாகவும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் ஆர் ஜெ பாலாஜி நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.