வடகலை – தென்கலை இடையே மோதல்…!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து பல்லக்கில் கோவிலிலிருந்து நேற்று முன்தினம் புறப்பட்ட வரதராஜ பெருமாள் வாலாஜாபாத், முத்தியால்பேட்டை, அய்யன்பேட்டை, வழியாக மண்டகப்படி கண்டருளி பழையசீவரம் கிராமத்தில் உள்ள மலை மீது எழுந்தருளினார்.

சுவாமி பார்வேட்டைக்கு வரும்போது வடகலை, தென்கலை சார்ந்தவர்கள்  “திவ்ய பிரபஞ்சம்” படுவது வழக்கம்.   இதில் வடகலை தென்கலை பிரிவினர்களுக்கு இடையே பல ஆண்டுகளாக யார் முதலில் திவ்ய பிரபஞ்சம் பாடுவது என்ற பிரச்னை உள்ளது. இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் பல ஆண்டு காலமாக நிலுவையில் உள்ளது.

இதற்கிடையில் இந்தப் பிரச்னை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதில் இருபிரிவினரும் திவ்ய பிரபஞ்சம் பாடகூடாது என கூறியது. அதற்கு மாற்றாக தோஸ்த்ர பாடம் எனப்படும் சமஸ்கிருத பாடல்கள் பாடப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டையில் மஞ்சுவிரட்டு போட்டி நடத்த அனுமதியில்லை.! ஆட்சியர் உத்தரவு.!

இந்நிலையில், நேற்று பார்வேட்டை உற்சவத்தின் போது வடகலை, தென்கலை பிரிவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால்  திடீரென ஒருவருக்கொருவர் மாறி மாறி அடித்துக் கொண்டனர். அப்பொழுது அங்கிருந்த பொதுமக்கள் இந்த சம்பவத்தை பார்த்து முகம் சுளித்தனர்.

author avatar
murugan