#UsElection : ஜோ பைடனின் வெற்றி! சீனா வாழ்த்து தெரிவிக்காதது ஏன்?

ஜோ பைடனின் வெற்றிக்கு சீனா வாழ்த்து தெரிவிக்காதது ஏன்?

கடந்த 3-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், வாக்கு என்னும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று பைடன் வெற்றி பெற்ற நிலையில், ட்ரம்ப் தோல்வியை தழுவினார். தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாத ட்ரம்ப், வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடைபெற்றதாக குற்றம்சாட்டி வருகிறார்.

இந்நிலையில், பைடனின் வெற்றிக்கு வெவ்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிற நிலையில், சீனா, ரஷ்யா, மெக்சிகோ போன்ற நாடுகள் வாழ்த்து தெரிவிக்கவில்லை. அமெரிக்க – சீன உறவு மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோ பைடனுக்கு ஏன் வாழ்த்து தெரிவிக்கவில்லை என சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்க்கு பதிலளித்த வாங் வென்பின், தேர்தலில் தான் வெற்றி பெற்றதாக அறிவித்துக் கொண்டதை கவனித்தோம். ஆனால் இந்த தேர்தல் முடிவுகள், அமெரிக்க சட்டங்கள் மற்றும் நடைமுறைகளுக்கு உட்பட்டு உறுதி செய்யப்பட வேண்டும் என நாங்கள் கருதுகிறோம்.’ என தெரிவித்துள்ளார்.

மேலும் அவரிடம், சீனா எப்போது அறிக்கை வெளியிடும்? அல்லது ட்ரம்பின் நிலைப்பாட்டை அறிய காத்திருக்குமா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்க்கு, நாங்கள் சர்வதேச விதிமுறைகளை பின்பற்றுவோம்.’ என பதிலளித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.