தடுப்பூசி பரிசோதனை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின்  தடுப்பூசி பரிசோதனை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்று அமெரிக்க அதிபர்  டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் கொரோனா தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள்  இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.இதனிடையே வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க அதிபர்  டொனால்ட் டிரம்ப் பேசினார் .அவர் பேசுகையில், ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின்  தடுப்பூசி மருத்துவ பரிசோதனை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தடுப்பூசி பரிசோதனைக்கு பதிவு செய்ய முன்வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா உட்பட உலகெங்கிலும் 200- க்கும் மேற்பட்ட இடங்களில் சுமார் 60,000 பேர் தடுப்பூசி சோதனைகளுக்கு முயற்சிக்கப்படுவார்கள் என்று அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம் (National Institutes for Health ) தெரிவித்துள்ளது. இதன் மூலம், ஜான்சன் & ஜான்சன் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியின் மூன்றாம் கட்ட தடுப்பூசியை பரிசோதிக்கும் உலகின் பத்தாவது மற்றும் அமெரிக்காவின் நான்காவது நிறுவனம் ஆகும். தடுப்பூசியை   பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டால் 2021 க்குள் மருந்து அவசர ஒப்புதலுக்கு தயாராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜான்சன் & ஜான்சன்  நிறுவனத்தின் தலைவர் அலெக்ஸ் கோர்ஸ்கி கூறுகையில், “கொரோனா  தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்க்கையை பாதித்துள்ளது. இந்த  நோயை முடிவுக்கு கொண்டுவருவதே எங்கள் ஒரே குறிக்கோள். எங்கள் நிறுவனம் தொடர்ந்து இந்த பணியில் ஈடுபட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.