, ,

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : வரும் 7-ஆம் தேதி முதல் ஓபிஎஸ் பரப்புரை..!

By

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள், வரும் 7-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.  

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, தேர்தல்கள் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

இதனையடுத்து, அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜனவரி 28-ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கி,  இன்று மாலையுடன் நிறைவடைந்தது. மேலும், வேட்புமனு பரிசீலினை நாளை நடைபெற உள்ளது.

இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள், வரும் 7-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை, காஞ்சிபுரம், வேலூர், ஓசூர், சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல், கரூர், திருச்சி, கன்னியாகுமாரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

Dinasuvadu Media @2023