நிவர் புயல் எதிரொலி – தமிழகம் உள்ளிட்ட 3 மாநில செயலாளர்களுடன் மத்திய கேபினெட் செயலாளர் ஆலோசனை

மத்திய கேபினெட் செயலாளர் ராஜீவ் கவுபா தமிழ்நாடு, பாண்டிச்சேரி மற்றும் ஆந்திரப்பிரதேச அரசு தலைமைச் செயலாளர்களிடம்  புயல் குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

நிவர் ஒரு சூறாவளி புயலாக தீவிரமடைய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வங்கக் கடலில் உருவாகி இருக்கும் நிவர் தீவிர புயலாக நாளை மறுநாள் கரையை கடக்கும்போது மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.காற்றழுத்த தாழ்வு மையம் மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.வரும் 25-ஆம் தேதி பிற்பகலில் காரைக்கால் -மாமல்லபுரம் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேசிய பேரிடர் மேலாண்மை குழு கூட்டத்தில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திர மாநில தலைமைச்செயலாளர்களுடன் மத்திய கேபினெட் செயலாளர் ராஜீவ் கவுபா காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

Leave a Comment