மத்திய அமைச்சரவை முடிவுகள் இன்று மாலை 4 மணிக்கு அறிவிப்பு.!

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் இன்று மாலை 4 மணிக்கு டெல்லியில் அறிவிக்கப்படும்.

டெல்லியில் உள்ள பிரதமர் மோடி இல்லத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் நரேந்திர தோமர் ஆகியோர் இந்த அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள் என்பது குறிப்பிடப்படுகிறது.

இதனிடையே நேற்று முன்தினம் பிரதமர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிதியமைச்சர் அறிவித்த அறிவுப்புகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.20,000 கோடிக்கு நிவாரண சலுகைள், சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10,000 கடனுதவி வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகளுக்கு ஊக்குவிக்கும் வகையில் 14 விளைபொருட்களுக்கான கொள்முதல் விலை கொள்முதல் விலை 50 சதவீதம் முதல் 83 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்