“பொது இடங்களில் உள்ள அங்கீகரிக்கப்படாத சிலைகளை அகற்ற வேண்டும்” உயர்நீதிமன்ற மதுரை கிளை!

தமிழகத்தில் பொது இடங்கள், சாலையோரங்கள், அரசு இடங்களில் உள்ள அங்கீகரிக்கப்படாத சிலைகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பொது இடங்களில், அனுமதியின்றி நிறுவப்பட்ட சிலைகளை அகற்ற வேண்டும் என்று தஞ்சாவூரை சேர்ந்த வைரசேகர் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வலக்கை தாக்கல் செய்தார். அந்த வழக்கு இன்று நீதிபதிகள் சிவஞானம் ஆனந்தி அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அனுமதியின்றி பொது இடங்களில் வைக்கப்பட்ட சிலைகளை அகற்ற 2016 மத்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை சட்டத்தின்படி வழி உள்ளது. இதனால் சாலை ஓரங்கள், சாலை நடுவில், பொது இடங்களில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்றுவதற்குத் தேசிய நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த் துறை மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.