29 ரஷ்ய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய உக்ரைன்.!

உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ரஷ்ய ஏவுகணை தாக்குதலுக்கு உக்ரைன் எதிர் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.

அந்த வகையில், தற்போது உக்ரேனிய வான் பாதுகாப்புப் படைகளின் சமீபத்திய இரவு நேர சோதனையில் உக்ரைனின் பல்வேறு பகுதிகளுக்கு எதிராக ரஷ்யா 30 குரூஸ் ஏவுகணைகளை வீசியது, அதில் 29 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ரஷ்ய ஏவுகணை ஒன்று ஒடேசாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு தொழில்துறை கட்டிடத்தைத் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் காயமடைந்தனர். ரஷ்ய படைகள், சோவியத் காலத்தில் உருவாக்கப்பட்ட ஏவுகணைகளை ஏவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது போக, உக்ரைன் ரஷ்யாவுக்கு சொந்தமான இரண்டு வெடிக்கும் ட்ரோன்களையும் இரண்டு உளவு ட்ரோன்களையும் சுட்டு வீழ்த்தியதாக கூறப்படுகிறது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.