ரஷ்ய கட்டுப்பாட்டில் இருக்கும் நகரத்தில் உக்ரைன் தாக்குதல் – 13 பேர் பலி!

கிழக்கு உக்ரைனில் ரஷ்ய கட்டுப்பாட்டில் இருக்கும் டொனட்ஸ்க் நகரம் மீது உக்ரேனியப் ராணுவ படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் 13 பேர் உயிரிழந்ததாகவும் 10 பேர் காயமடைந்ததாக டொனட்ஸ்க் நகர நிர்வாகத் தலைவர் டெனிஸ் புஷிலின் தகவல் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த சம்பவம் குறித்து உக்ரைனில் இருந்து உடனடி கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. டொனட்ஸ்க் நகரின் மேயரின் கருத்துப்படி, உக்ரேன் ராணுவம் இங்கிருக்கும் கடைகள் அமைந்துள்ள பரபரப்பான பகுதியில் இந்த ஏவுகணை தாக்குதலை நடத்தியதாக தெரிவித்துள்ளார்.

தாக்குதலை தொடர்ந்து, சம்பவ இடத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், இன்று காலை ரஷ்யாவின் உஸ்ட்-லுகா துறைமுகத்தில் உள்ள இரசாயன போக்குவரத்து முனையத்திலும் தீ விபத்து ஏற்பட்டது.

ஆப்கானிஸ்தானில் விமானம் விபத்து – மத்திய விமான அமைச்சகம் மறுப்பு.!

உக்ரேனன் ராணுவம் ட்ரோன் தாக்குதலில் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கணிக்கப்பட்ட நிலையில், சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.