UKMSSB: அரசு மருத்துவக் கல்லூரியில் வேலை வாய்ப்பு.!

UKMSSB: உத்தரகாண்ட் மருத்துவ சேவை தேர்வு வாரியம் (UKMSSB) பேராசிரியர் மற்றும் இணை பேராசிரியர் என காலியாகவுள்ள மொத்தம் 156 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

உத்தரகாண்ட் மாநில அரசு மருத்துவக் கல்வித் துறையில் காலியாக உள்ள 53 பேராசிரியர் பணியிடங்களும், 103 இணை பேராசிரியர் பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பைப் படித்துவிட்டு மருத்துவ சேவை தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான UKMSSB என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி 01-04-2024 அன்று தொடங்குகிறது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 30-04-2024 அன்றுடன் முடிவடைகிறது.

விண்ணப்பக் கட்டணம்

முன்பதிவு செய்யப்படாத OBCவிண்ணப்பதாரர்களுக்கு ரூ.2000 எனவும் SC,ST,EWS மற்றும் ஊனமுற்ற விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1000 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கட்டண முறை

ஆன்லைன் பேமெண்ட் மூலமாக, நெட் பேங்கிங், டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மற்றும் UPI பேமெண்ட் ஆகியவற்றின் மூலம் பணம் செலுத்தலாம். ஏப்ரல் 30-ம் தேதி மாலை 5 மணிக்குள் கட்டணம் செலுத்த வேண்டும்.

காலியிட விவரங்கள்

  1. பேராசிரியர் – 53
  2. இணைப் பேராசிரியர் – 103

வயது

குறைந்தபட்ச வயது 30 முதல் அதிகபட்ச வயது 62 வரை இருக்க வேண்டும்.

தகுதி

மருத்துவ நிறுவனங்களின் விதிமுறைகளின்படி கட்டாயப்படுத்தப்பட்ட தகுதிகளை கொண்டிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை

இந்த பணிகளுக்கான விண்ணப்பத்தை நிரப்புவதற்கு முன், விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில்  குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளையும் கவனமாக படிக்க வேண்டும்.

பேராசிரியர் மற்றும் இணை பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு செயல்முறை அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.

இருப்பினும், விண்ணப்பதாரர்கள் தங்கள் தகுதிகள் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்டுகிறது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.