திருவண்ணாமலை ATM கொள்ளை வழக்கில் மேலும் இருவர் கைது!

ஹரியானாவில் மேலும் 3 கொள்ளையர்கள் பதுங்கிய இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது என எஸ்பி கார்த்திகேயன் தகவல்.

மேலும் இருவர் கைது:

atmthiruvanamalai

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கு தொடர்பாக மேலும் இருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கர்நாடகா, கோலாரியில் பதுங்கி இருந்த குர்திஷ் பாஷா மற்றும் அஷ்ரப் உசேன் ஆகியோர் தனிடையினர் கைது செய்துள்ளனர். ஏற்கனவே, ஏடிஎம் கொள்ளை வழக்கில் ஹரியானவை சேர்ந்த கொள்ளை கும்பலின் தலைவன் ஆரிப், கூட்டாளி ஆசாத் ஆகிய இருவர் கைதான நிலையில், மேலும் இருவர் கைதாகியுள்ளனர்.

இருவரை சுற்றிவளைத்த தனிப்படை:

sp21

ஹரியானா கொள்ளையர்களின் கூட்டாளிகளாக செயல்பட்ட மேலும் இருவரை சுற்றிவளைத்தது தனிப்படை காவல்துறை. திருவண்ணாமலையில் 4 ஏடிஎம்களில் அடுத்தடுத்து ரூ.73 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் ஏடிஎம் கொள்ளையர்கள் கர்நாடகா மாநிலம் கோலார் தப்பி சென்று அங்கிருந்து ஹரியானா சென்றது தெரியவந்தது. ஏற்கனவே, கைது செய்யப்பட்ட 2 பேரிடம் இருந்து ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

டிரக் வாகனம் மூலம் பணம் மாற்றம்:

எஞ்சிய ரூ.70 லட்சம் எங்கே பதுக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிய காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது. இந்த சமயத்தில் ஏடிஎம் கொள்ளை வழக்கு தொடர்பாக மேலும் இருவரை கைது செய்துள்ளனர். கொள்ளையர்கள், கர்நாடகாவில் இருந்து அரியானா தப்பிச் செல்வதாக திட்டமிட்டிருந்ததாக போலீஸ் விசாரணையில் அம்பலமானது.

ATMTHEFT

இதுதொடர்பாக எஸ்பி கார்த்திகேயன் கூறுகையில், திருவண்ணாமலை ஏடிஎம்களில் கொள்ளையடித்த பணத்தை கர்நாடகாவில் இருந்து டிரக் வாகனம் மூலம் மாற்றப்பட்டுள்ளது. ஹரியானாவில் மேலும் 3 கொள்ளையர்கள் பதுங்கிய இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது எனவும் கூறியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment