நீக்கிய பணியாளர்களை மீண்டும் பணியில் சேருமாறு அழைத்த ட்விட்டர்.!

ட்விட்டரிலிருந்து நீக்கிய பணியாளர்களை மீண்டும் பணிக்கு திரும்புமாறு அந்நிறுவனம் அழைத்துள்ளது.

எலான் மஸ்க், ட்விட்டரின் தலைமையேற்ற பின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ட்விட்டரின் போலி கணக்குகள் குறித்து அதை நீக்கும் முயற்சியில் ப்ளூ டிக்கிற்கு மாதம் $8 என விலை அறிவித்தார். தினமும் $4 அளவில் இழப்பு ஏற்படுவதாகக்கூறி உலகம் முழுவதும் பணிபுரியும் அதன் 50% ஊழியர்களை நீக்கியது. கிட்டத்தட்ட 3700 பணியாளர்களை நீக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது ட்விட்டர் நிறுவனர் எலான் மஸ்க், பணியிலிருந்து நீக்கப்பட்ட சில பணியாளர்களை மீண்டும் வேலைக்கு வரும்படி அழைத்துள்ளார். இது குறித்து மஸ்க் கூறியதாவது, சில பணியாளர்கள் தவறுதலாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி அவர்களை மீண்டும் பணிக்கு அழைத்துள்ளது. மற்ற பணியாளர்கள் நீக்கம், அவர்களது திறன், அனுபவம் மற்றும் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக நீக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ட்விட்டரின் வளர்ச்சிக்காக தேவைப்படும் 5 பேரிடம் மீண்டும் பணிக்கு வர கேட்கப்பட்டதாகவும், அதில் ஒருவர் அந்த அழைப்பை நிராகரித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
Muthu Kumar

Leave a Comment