50% பணியாளர்களை உலகம் முழுதும் நீக்கியுள்ள ட்விட்டர் நிறுவனம்.!

ட்விட்டர் நிறுவனம் உலகம் முழுதும் 50% பணியாளர்களை பணியிலிருந்து நீக்கியுள்ளது.

கடந்த அக்-27 ஆம் தேதி ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க், ட்விட்டரில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். சில தினங்களுக்கு முன் ப்ளூ டிக் அம்சத்திற்கு மாதம் $8 செலுத்த வேண்டும் என அறிவித்தார்.

தற்போது உலகம் முழுதும் ட்விட்டரில் பணிபுரியும் அதன் 50% பணியாளர்களை நீக்கியுள்ளது. இது குறித்து எலான் மஸ்க், “ட்விட்டர் தினமும் $4 அளவில் இழப்பு ஏற்படுகிறது, இதனை தவிர்க்க வேண்டுமானால், இப்படி பணிநீக்கம் செய்வதை தவிர வேறு வழியில்லை, இது மிகவும் அவசியமாகிறது என்று கூறியுள்ளார்.

எந்த வித முன்னறிவிப்பும் இன்றி ட்விட்டர் நிறுவனம் அதன் பணியாளர்களை நீக்கியுள்ளது. அதாவது 60 நாள் முன் அறிவிப்பை வழங்காமல் பெருமளவிலான பணிநீக்கங்களை நடத்தியுள்ளது. இதனால் அதன் ஊழியர்கள் ட்விட்டர் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்.

author avatar
Muthu Kumar

Leave a Comment