4400 ஒப்பந்த ஊழியர்களை அதிரடியாய் நீக்கிய ட்விட்டர்.! வெளியான அதிர்ச்சி தகவல்.!

ட்விட்டர் நிறுவனம் ஏற்கனவே 50% ஊழியர்களை பணி நீக்கிய நிலையில் தற்போது 4,400 ஒப்பந்த ஊழியர்களை நீக்கியுள்ளதாக தகவல்.

ட்விட்டரின் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு எலான் மஸ்க், ட்விட்டரின் வளர்ச்சி மற்றும் வருவாய் முன்னிட்டு பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அந்நிறுவனம் ட்விட்டரின் 50% பணியாளர்களை பணியிலிருந்து நீக்கியது, இதில் இந்தியாவிலிருந்து பணிபுரியும் 90% பணியாளர்களை நீக்கியது.

தற்போது நிரந்தர பணியாளர்களுக்கு பதில் ஒப்பந்த ஊழியர்களுக்கு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பணிபுரியும் 5500 பணியாளர்களில் அமெரிக்கா, இந்தியா மற்றும் பல இடங்களில் இருந்து 4400 பேரை வேலையிலிருந்து நீக்கியுள்ளது என தகவல் வெளியானது.

author avatar
Muthu Kumar

Leave a Comment