ஹேக் செய்யப்பட்ட முக்கிய தலைவர்களின் ட்விட்டர் கணக்குகள் ! மன்னிப்பு கேட்ட ட்விட்டர்

அண்மையில் ஜோ பைடன், பாரக் ஒபாமா, பில்கேட்ஸ், எலன் மஸ்க் உள்ளிட்ட பிரபலங்களின் டிவிட்டர் கணக்குகள் ஒரே சமயத்தில் ஹேக் செய்யப்பட்ட நிலையில் ட்விட்டர் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும்  ஜோபைடன், முன்னாள் அதிபர் ஒபாமா ,தொழிலதிபர்கள் எலன் மஸ்க், பில்கேட்ஸ் , ஜெப் பெசேஸ்,வாரன் பப்பெட், மைக் புளும்பெர்க் ஆகியோரின் டுவிட்டர்கள் கணக்குகள்   ஒரே நேரத்தில் ஹேக் செய்யப்பட்டது. பிட் காயின் மற்றும் கிரிப்டோ கரன்ஸி  போன்றவை தொடர்பான மோசடிப் பதிவுகள் அவர்களின் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்பட்டிருந்தது.மேலும் அந்த பதிவுகளில்,கிரிப்டோ கரன்ஸிக்கு நன்கொடை அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளாகவே பிட்காயின் எனப்படுகின்ற டிஜிட்டல் கரன்சி அல்லது, கிரிப்டோ கரன்சி எனப்படுகின்ற கணினி வழி பணப் பரிவர்த்தனையானது பிரபலம் அடைந்து வருகின்றது. இதனால் உலகெங்கும் டிஜிட்டல் நாணயங்களுகென தனி மையங்கள், இயங்குகின்றன. ஹேக் செய்யப்பட்டதன் பின்னணியில் பிட்காயின் பரிவர்த்தனை செய்கின்ற கும்பலுக்கு தொடர்பிருப்பதாக தகவல் வெளியானது .

பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  மேலும் இது போன்ற ஒரு நிகழ்வு மிகப்பெரிய விதிமீறல் நடந்துள்ளதாக கடும் கண்டனம் எழுந்தது.இது தொடர்பாக ட்விட்டர் நிறுவனம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இது குறித்து ட்விட்டர் நிறுவனம் கூறுகையில்,இந்த செயல்கள் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.எங்களுக்கு மிகவும் ஏமாற்றம் அளித்துள்ளது இந்த செயல். மேலும் இந்த செயலுக்கு மன்னிப்பு கேட்பதாகவும் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.சுமார் 130 பயனர்களின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்ய முயற்சிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.