தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கு – 3 வாரங்களுக்கு ஒத்திவைப்பு.!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் நச்சுப் பொருட்கள் வெளியேற்றப்படுவதாக புகார்கள் எழுந்தது அதற்கு எதிராக போராட்டமும் நடந்தது அந்தப் போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அதற்குப் பிறகு ஆலையை நிரந்தரமாக மூடி தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. இதனையடுத்து ஸ்டெர்லை நிர்வாகமானது தங்களது ஆலையை மீண்டும திறக்கவேண்டும் என உச்ச நிதி மன்றத்தில் தொடங்கிய வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது.

ஸ்டெர்லைட்  நிர்வாகம் அவ்வப்போது இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்வது வழக்கமான ஒன்று. அந்த வழக்குகளும் அவ்வப்போது விசாரணைக்கு வருவதும் உண்டு. ஆனால் இதில் பெரிய அளவிலான உத்தரவு எதுவும் தற்போது வரை வராமல் இருக்கிறது.

அந்த வகையில்  ஸ்டெர்லைட் நிர்வாகம்  ஆலையை பராமரிப்பு காரணங்களுக்காக மீண்டும் திறக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக அரசின் உயர்மட்ட குழு அனுமதி வழங்கியுள்ள கழிவுகளை நீக்க மட்டுமே ஸ்டெர்லைட் ஆலைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது.

அரசு அனுமதிக்காத எந்த பணிகளையும் அனுமதிக்க முடியாது எனவும்  நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும், இந்த வழக்கை உச்சநீதிமன்றம்  3 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment