தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (டிசம்பர் 22) -ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.  நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாக்குமரி மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் பெய்து வரும் கடும் மழை,வெள்ளத்தால் ஒட்டுமொத்த மக்களும் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து பரிதவிக்கிறார்கள்.

அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 95 செ.மீ மழை ஒரே நாளில் பதிவாகியுள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையால் தாமிரபரணி ஆறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகள், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இன்னும் மீட்பு பணிகள் நடந்துவருவதாலும் சாலையில் தேங்கி இருக்கும் நீர் இன்னும் வடியாத காரணத்தாலும் நாளை (டிசம்பர் 22) -ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சாலை மற்றும் வீடுகளில் தேங்கி இருக்கும் நீர் வடிவதற்கு இன்னும் 3 நாட்கள் ஆகும் என்பதால் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏற்கனவே கனமழையால் பெய்த வெள்ளம் காரணமாக திங்கள், செவ்வாய், புதன் வியாழன் என 4-நாட்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை கொடுக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது 5-வது நாளாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.