துருக்கி, சிரியா நிலநடுக்கம்..! ரூ.90 கோடி உதவித்தொகை அறிவிப்பு..!

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 11 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.90 கோடி) உதவித்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானிஸ் மற்றும் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ், 11 மில்லியன் அமெரிக்க டாலர்களை (ரூ.90 கோடி) உதவித்தொகையாக அறிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் கான்பராவில் நடந்த ஒரு கூட்டு செய்தி மாநாட்டில், ஆஸ்திரேலியா பிரதமர் மல்பானிஸ் செஞ்சிலுவை மற்றும் மனிதாபிமான முகவர் மூலம் உதவித்தொகையாக 10 மில்லியன் (ரூ.82 கோடி) அமெரிக்க டாலர்களை வழங்கும் என்று கூறினார்.

Australia, NZ announces USD 11 million

இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவிற்கு தனது முதல் அரசுமுறை பயணத்தை மேற்கொண்டுள்ள கிறிஸ் ஹிப்கின்ஸ் 1.5 மில்லியன் (ரூ.12 கோடி)அமெரிக்க டாலர்களை வழங்குவதாகக் கூறினார். துருக்கியில் நேற்று மட்டும் 3-முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. அதே போல் சிரியாவில், இரண்டுமுறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால், பல கட்டடங்கள் தரைமட்டமாகியதோடு, ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

Turkey and Syria earthquake 1

அதன்படி, துருக்கியில் தற்போது வரை 2921 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 15,834 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிரியாவில் இதுவரை 1451 பேர் உயிரிழந்துள்ளனர். 3531 பேர் காயமடைந்துள்ளனர். மொத்தம் இரு நாடுகளிலும் சேர்த்து இதுவரை 4372 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என கணிக்கப்படுகிறது.

turkey

துருக்கிய செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவரான கெரெம் கினிக், தனது குழு பூகம்ப மண்டலத்திற்கு கூடுதல் இரத்தத்தை அனுப்புவதாக ட்வீட் செய்துள்ளார். மேலும் இந்த மாபெரும் பேரழிவின் விளைவுகளை அகற்றும் வகையில், 2000க்கும் மேற்பட்ட செஞ்சிலுவைச் சங்கத் தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாகவும், இதுவரை 5 மொபைல் சமையலறைகள், 77 கேட்டரிங் வாகனங்கள், கிட்டத்தட்ட 2,000 கூடாரங்கள் மற்றும் 25,000 க்கும் மேற்பட்ட போர்வைகளை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment