நாவில் சுவையூறும் தக்காளி ஊறுகாய்! ஒருமுறை இந்த மாதிரி செய்து பாருங்க…

சில காய்களை நம் உணவில் விரும்பி சாப்பிடுவோம். அதுவும் பச்சையாகவும் சாப்பிடுவோம். தக்காளி சேர்க்காத உணவுகளே இல்லை என்றே சொல்லலாம். உணவுகளில் மட்டும் இல்லாமலும் அழகு சாதனங்களிலும் பயன்படுத்தப்படும் ஒரு அழகான பழம். இந்த தக்காளியை வைத்து நாம் இன்று தக்காளி ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

தக்காளி=1. 1/2 கிலோ
கடுகு= ஒரு ஸ்பூன்
வெந்தயம்= ஒரு ஸ்பூன்
சீரகம்=1 ஸ்பூன்
நல்லெண்ணெய் =200 ml
புளி =100 கிராம்
மிளகாய்த்தூள் =100 கிராம்
செய்முறை:
தக்காளியை தண்ணீர் இல்லாமல் துடைத்து அதை நான்காக நறுக்கி அதில் உள்ள காம்பு பகுதியை நீக்கி விடவும்.ஒரு பாத்திரத்தில் தக்காளியை சேர்த்து அதிலே ஊறவைத்த புளி யையும் சேர்த்து, நல்லெண்ணெய் 50 ml சேர்த்து தண்ணீர் வற்றும் வரை கொதிக்க விடவும்.தண்ணீர் வற்றியதும் நன்கு ஆற வைத்து மிக்ஸியில் தண்ணீர் இல்லாமல் நைசாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கடுகு மற்றும் வெந்தயத்தை பொன்னிறமாக வறுத்து பொடி செய்து கொள்ளவும். அரைத்த பொடியை தக்காளி விழுதில் சேர்க்கவும். அதனுடன் மிளகாய் தூளையும் சேர்த்து நன்கு கலக்கவும்.

150 ML நல்லெண்ணையில் கடுகு,சீரகம் ,வெந்தயம் சேர்த்து தாளித்து அதிலே பத்து பூண்டை தோல் நீக்காமல் சேர்த்து வதக்கவும். கருவேப்பிலை மற்றும் பெருங்காயத்தையும் சேர்த்து , அதனுடன் தக்காளி விழுதையும் நன்கு கலக்கி மிதமான தீயில் எண்ணெய் பிரியும் வரை நன்றாக வதக்கவும்.இப்போது சுவையான மணமணக்க தக்காளி ஊறுகாய் ரெடி. இதை ஒரு காற்று புகாத பாத்திரத்தில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்தால் ஆறு மாதம் வரை கெட்டுப் போகாது. குறிப்பு, தண்ணீர் படவே கூடாது. இதை நாம் இட்லி தோசை, சப்பாத்தி, சாதம் என அனைத்து உணவுகளிலும் சேர்த்து சாப்பிடலாம். அவ்வப்போது சமைக்க முடியாத நேரங்களில் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

நிறைந்துள்ள சத்துக்கள்:

விட்டமின் ஏ, விட்டமின் சி, விட்டமின் பி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புசத்து   போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. பீட்டா கரோட்டின்  அதிகம் உள்ளது. மாவுச்சத்து குறைவாக காணப்படுகிறது.

பயன்கள்:

மாவுச்சத்து குறைவாக உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம்.

விட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாகிறது.

சருமத்திற்கு நல்ல புத்துணர்ச்சியை கொடுத்து சருமம் வறட்சியாகாமலும் ,வயதாவதை தாமதப்படுத்தவும் செய்கிறது.

இது சிறந்த சிறுநீர் பெருக்கியாக செயல்படுகிறது. கிருமிகளை நன்கு வெளியேற்றுகிறது.

ஆண்களுக்கு ப்ரோஸ்டேட் நோய் வரும் அபாயத்தை குறைக்கிறது.

பீட்டா கரோட்டின் அதிகமாக இருப்பதால் கண் கோளாறுகளை சரி செய்கிறது.

தக்காளியில் உள்ள இரும்புச்சத்து எளிதில் ஜீரணம் ஆகி முழுமையாக நம் உடலில் கலந்து விடும்.

இதில் உள்ள ஆக்சிஜனனேட்ரி   இதயத்தை பலப்படுத்தும் மேலும் புற்று நோய் வருவதற்கான வாய்ப்பை குறைக்கிறது.

சூரிய கதிர்களால் வரும் பாதிப்பை குறைத்து சருமத்தை பாதுகாக்கிறது.

94% நீர்ச்சத்து இருப்பதால் ஜீரண சக்தியை அதிகரித்து மெட்டபாலிசத்தையும் அதிகரிக்க உதவுகிறது. மேலும் உணவுப் பொருள்களில் உள்ள சத்துக்களை உறிந்து  கொள்ளும் தன்மையை உடலில் அதிகப்படுத்துகிறது.

பக்க விளைவுகள் :

தக்காளியில் அதிக அளவு மாலிக் ஆசிட் மற்றும் சிட்ரிக் ஆசிட் உள்ளதால் நாம் அதிகம் எடுத்து கொள்ளும்போது பல எதிர்வினைகளையும் உண்டு செய்யும்.

நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். குடல் வீக்கம், சருமத்தில் சிவப்பு தட்டுகள் போன்றவை ஏற்படும்.

தக்காளி அதிகம் எடுத்துக் கொள்ளும் போது நம் உடலில் பித்தத்தை அதிகரிக்கிறது.

கால்சியம் மற்றும் ஆக்சிலேட் அதிகம் உள்ளதால் இது சிறுநீர் கற்களையும் ஏற்படுத்தும்.

இந்த அழகான தக்காளியை நாம் அளவோடு பயன்படுத்தி ஆரோக்கியத்தை பேணி காப்போம்.

author avatar
K Palaniammal
நான் பழனியம்மாள், இளங்கலை மனையியல் பட்டதாரியான நான் கடந்த ஆறு மாதங்களாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். லைஃப் ஸ்டைல், ஆன்மீகம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.