உங்க வீட்டு மளிகை பொருள் சீக்கிரம் கெட்டுப் போகுதா? அப்போ இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க..

காய்கறி மற்றும் பழங்களை நாம் வாரம் ஒரு முறை அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை கூட வாங்கிக் கொள்ளலாம். இப்ப உள்ள காலகட்டத்தில் தினமும் கூட இந்த பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். ஆனால் பருப்பு மற்றும் பயிறு வகைகளை நாம் மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது மூன்று மாதத்துக்கு ஒரு முறையைத்தான் வாங்குவோம்.

அவ்வாறு நாம் நீண்ட நாள் பயன்படுத்தும் போது வண்டுகள் மற்றும் பூச்சிகள் வந்துவிடும். இவ்வாறு பூச்சிகள் வராமல் இருக்க இந்த பதிவில் பல குறிப்புகள் உள்ளது.

பருப்பு மற்றும் பயறு வகைகள் சேகரிக்கும் போது அதன் மேல் பூண்டின் காம்பை போட்டு வைக்கலாம் அல்லது தேங்காயின் ஓடு, பிரியாணி இலை போன்றவற்றைக் கூட போட்டு வைக்கலாம். இவ்வாறு செய்தால் விரைவில் பூச்சிகள் வராது. மேலும் ஏற்கனவே உள்ள பழைய பருப்புகளை நாம் எடுத்து விட வேண்டும்.

நெய்யை கடையிலிருந்து வாங்கி வந்த பிறகு அதை ஒரு கண்ணாடி பாட்டில் அல்லது சில்வர் டப்பாவில் கால் ஸ்பூன் வெந்தயம் சேர்த்து அதன் பிறகு நெய்யை ஊற்றி வைக்கவும். இவ்வாறு செய்தல் நீண்ட நாள் நல்ல மணமாக இருக்கும். சர்க்கரை மற்றும் வெள்ளம் இருக்கும் இடத்தில் நான்கு கிராம்பை போட்டு வைத்தால் எறும்புகள் அண்டாது.

புளியை நாம் சேகரிக்கும் போது அதன் விதைகள் மற்றும் நார்களை நீக்கி விட்டு ஒரு ஜாடியில் போட்டு தேங்காய் ஓடை மேலே போட்டு வைக்கவும். மிளகாய்த்தூளை நாம் நீண்ட நாளுக்கு தேவையானதை அரைத்து பயன்படுத்துவோம். அவ்வாறு பயன்படுத்தும் போது அதன் வாசனை மற்றும் சுவை நீண்ட நாட்கள் இருக்க காய்ந்த மிளகாயை போட்டு அதன் மீது மிளகாய் தூளை டைட்டாக காற்று புகாதவாறு அடைத்து வைக்க வேண்டும்.

உப்பு ஜாடியில் தேங்காய் ஓடை போட்டு வைத்தால் உப்பில் தண்ணீர் இருந்தால் அதை அந்த ஓடு உறிஞ்சிக் கொள்ளும். தேங்காய் எண்ணெய் நீண்ட நாள் கெடாமல் இருக்க 4 மிளகு பாட்டிலில் சேர்த்து பயன்படுத்தவும். அஞ்சரை பெட்டியில் மிளகாய் காம்புகளை போட்டு வைத்தால் அந்தப் பொருள்களில் எளிதில் வண்டுகள் வராது.

அரிசியில் வண்டு புழு போன்றவை வராமல் இருக்க வசம்பு மற்றும் பட்டையை அரசியல் போட்டு கலந்து வைக்கலாம். வெள்ளைப் பூண்டு கெடாமல் இருக்க உப்பை வறுத்து பூண்டு இருக்கும் டப்பாவில் போட்டு அதன் மேலே பூண்டை வைத்தால் ஒரு வருடம் ஆனாலும் கெடாமல் இருக்கும். இந்த முறைகளை கையாண்டு மளிகை பொருட்களை சேகரித்து நீண்டநாள் வரை பயன்படுத்துங்கள்.

author avatar
K Palaniammal
நான் பழனியம்மாள், இளங்கலை மனையியல் பட்டதாரியான நான் கடந்த ஆறு மாதங்களாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். லைஃப் ஸ்டைல், ஆன்மீகம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.