மணல் திருட்டை தடுத்த சப்-இன்ஸ்பெக்டரை டிராக்டர் ஏற்றி கொலை செய்ய முயற்சி.!?

திருச்சி மாவட்டத்தில் மணல் திருட்டை தடுக்க வந்த சப்-இன்ஸ்பெக்டர் மீது திருட்டில் ஈடுபட்டவர்கள் டிராக்டர் கொண்டு மோதியுள்ளனர். இதில், எஸ்.ஐக்கு கை, கால்கள் முறிந்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்துள்ள பெருவளப்பூர் – ரெட்டிமாங்குடி ஊர்களுக்கு இடையில் சந்திரமுகி ஓடை உள்ளது. இந்த ஓடையில், தொடர்ந்து மணல் திருட்டு நடைபெற்று வந்துள்ளதாம். நேற்று முன் தினம் இரவு ரெட்டி மாங்குடி கவுண்டர் தெருவை சேர்ந்த ராமராஜன், கீழ தெருவை சேர்ந்த குணா, ரெட்டியார் தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன் மற்றும் மேலும் 2 பேர் சேர்ந்து மணல் திருடி வந்துள்ளனர்.

அவர்கள் நேற்று முன்தினம் இரவு மணல் அள்ளும் பொக்லைன் எந்திரம், டிப்பர் லாரி, டிராக்டர் கொண்டு மணல் திருடிகொண்டு இருந்துள்ளனர். அப்போது தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு சிறுகனூர் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேலன் வந்துள்ளார்.

சப்-இன்ஸ்பெக்ட்டரை கண்டதும் ராமராஜன், குணா, ரவிச்சந்திரன் ஆகிய 3 பேரும் டிராக்டரை கொண்டு எஸ்.ஐ செந்தில்வேலன் மீது மோதியுள்ளனர். இதில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேலனுக்கு கை கால்கள் முறிந்தன.

காயமடைந்த அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து சிருகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து டிராக்டரை பறிமுதல் செய்து, ராமராஜன், குணா, ரவிச்சந்திரன் ஆகியோரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். தப்பியோடிய மேலும், இருவரை தேடி வருகின்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.