2 நாள் போராட்டத்தை வாபஸ் பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் ..

போக்குவரத்து தொழிலாளருக்கு 13-வது ஊதிய ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்  , கடந்த 2019 செப்டம்பர் மாதம் முதல் ஊதிய உயர்வு வழங்கவும் ,25 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் மேலும்  14-வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக தொழிற் சங்கத்தினர் நேற்று  தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழக மண்டல தலைமை அலுவலகங்கள் முன்பு காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

இதையெடுத்து நேற்று போக்குவரத்து துறை 14வது ஊதிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையை மார்ச் 20-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த பேச்சுவர்த்தையில் எந்தத்தந்த தொழிற்சங்கங்கள் பங்கேற்பார்கள் மேலும் போக்குவரத்து துறை அமைச்சர் நேரடியாக கலந்துகொள்ளவரா.. ?என்பது குறித்த தகவலை போக்குவரத்து துறை அதிகாரிகள் அறிவிக்கவில்லை, இது தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகள் அறிவிக்கவேண்டும்.

இந்த பேச்சுவார்த்தையில் எந்தந்த தொழில் சங்கங்கள் கலந்துகொள்வார்கள் ,அதேபோன்று எவ்வளவு காலகட்டத்திற்குள் பேச்சுவார்த்தை முடிப்பார்கள் என்பதை பற்றி அவர்கள் கூறவில்லை என்பதை வலியுறுத்தி கடந்த இரண்டு நாள்களாக போராட்டங்கள் நடைபெற்றன.

போக்குவரத்துத்துறை செயலாளர் பிரதாப் யாதவ்விடம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் சந்திப்பில் பேசினார்கள்.அந்த சந்திப்பில் போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கையை உரிய பரிசீலனை  செய்வதாகவும்  20-ம் தேதிக்குள் முறையான பதில் கொடுக்கப்படும் என பிரதாப் யாதவ் உறுதியளித்தார்.

இதையெடுத்து போராட்டத்தில் ஈடுபட்டபோக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தை  வாபஸ் பெறுவதாக கூறினார்கள்.

author avatar
murugan