நச்சுத்தன்மையை கண்டறிய கருவிகள் – வேளாண்மைத்துறை அறிவிப்பு!

உழவர் சந்தைகளில் விளைபொருட்களின் நச்சுத்தன்மையை கண்டறிய, கருவிகள் அமைக்க ஏற்பாடு செய்யப்படும்  என்று தமிழக வேளாண்மைத்துறை அறிவித்துள்ளது. விளைபொருட்கள் தரமானதாக மக்களுக்கு கிடைக்க வேண்டுமென தமிழக வேளாண்மைத்துறை தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், காய்கறிகள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக அதில் ரசாயன பொருட்கள் தெளிப்பதாக புகார் எழுந்த நிலையில், உழவர் சந்தைகளில் உள்ள காய்கறிகளில் நச்சுத்தன்மை குறித்த ஆய்வுக்கு கருவிகள் பொறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

விற்பனைக்கு கொண்டுவரப்படும் பழங்கள், காய்கறிகளில் நச்சுத்தன்மையை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக 25 உழவர் சந்தைகளில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் பழங்கள், காய்கறிகளில் உள்ள ரசாயன மருந்துகள் குறித்து ஆய்வு செய்ய கருவிகள் அமைக்கப்படவுள்ளது. பாதுகாப்பான காய்கறிகள், பழங்கள் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய தமிழக வேளாண்மைத்துறை புதிய முயற்சியை எடுத்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்