Connect with us

NEETEXAM: மே 5ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு.. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

NEET 2024

இந்தியா

NEETEXAM: மே 5ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு.. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

2024-25 கல்வியாண்டுக்கான சில முக்கிய தேர்வுகளுக்கான தேர்வு காலெண்டரை தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்டுள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு 2024 மே 5-ஆம் தேதி நடைபெறும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு முடிவுகள் 2024 ஜூன் 2-ஆவது வாரத்தில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஐடி உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஜேஇஇ தேர்வு 2 அமர்வுகளாக நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜேஇஇ முதல் அமர்வு தேர்வு ஜனவரி 24ம் தேதி முதல் பிப்ரவரி 1 வரையும், இரண்டாவது அமர்வு ஏப்ரல் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரையும் நடத்தப்பட உள்ளது.

மேலும், நாடு முழுவதும் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான கியூட் நுழைவு தேர்வு மே 15ம் தேதி முதல் 31ம் தேதிக்குள் நடைபெறும் எனவும் தேசிய தேர்வு முகமை  தெரிவித்துள்ளது.

Continue Reading

More in இந்தியா

To Top