மோசமடையும் காற்றின் தரம்… இந்தியாவின் டாப் 10 லிஸ்ட் இதோ…

தற்போது நாடு முழுவதும் வாகனங்களின் அதிகரிப்பு, இயற்கை வளங்களின் பரப்பளவு குறைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் காற்றின் தரம் பல்வேறு நகரங்களில் மோசமடைந்து வருகிறது. தமிழக தலைநகர் சென்னையின் காற்றின் தரம்கூட நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் காற்றின் தரம் மோசமடைந்து உள்ள நகரங்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் மோசமான நிலை, மிகவும் மோசமான நிலை என மாறி மாறி டெல்லியின் காற்றின் தரம் பதிவாகி உள்ளது. இன்று காலை 7.00 மணிக்கு பதிவு செய்யப்பட்ட மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) தரவுகளின்படி, டெல்லியின் ஒட்டுமொத்த காற்றின் தரம் AQI 326 என பதிவாகியுள்ளது.

இன்று காலை 7 மணி தரவுகளின்படி, டெல்லி முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் காற்றின் தரமானது ‘மிகவும் மோசமான நிலை மற்றும் மோசமான நிலை என்ற இரு பிரிவில் பதிவு செய்யபட்டுள்ளது. அலிபூர் போன்ற பகுதிகளில் காற்றின் தரம் 324 ஆகவும், ஆனந்த் விஹார் 357 ஆகவும், அசோக் விஹாரில் 356 ஆகவும், துவாரகா செக்டர்-8ல் 323 ஆகவும், ஐடிஓவில் 330 ஆகவும், ஜஹாங்கிர்புரியில் 370 ஆகவும், நரேலாவில் 337 ஆகவும், பஞ்சாபி பாக்கில் 352 ஆகவும், ஆர்கே புரத்தில் 356 ஆகவும் உள்ளது. ரோகினியில் 319, ஷாதிபூரில் 373, வஜிர்பூரில் 381 எனவும் பதிவாகியுள்ளது.

மோசமான காற்றின் தரக் குறியீடு உள்ள நகரங்களுக்க்கான பட்டியலில்,  தேசிய தலைநகர் டெல்லி  6 வது இடத்தில் உள்ளது. முதல் 3 இடங்களில் பீகார் நகரங்கள் உள்ளது. மேலும் டாப் 10இல் 5 இடங்களை பீகார் பிடித்துள்ளன.

மோசமான காற்றுத் தரக்குறியீட்டை கொண்ட முதல் 10 நகரங்கள்..

1. கதிஹார் (பீகார்) காற்றின் தரம் – 393 AQI

2. சஹர்சா (பீகார்) காற்றின் தரம் – 379 AQI.

3. பூர்ணியா (பீகார்) காற்றின் தரம் – 373 AQI.

4. முசாபர்நகர் (உத்தர பிரதேசம்) காற்றின் தரம் – 362 AQI.

5. பாகல்பூர் (பீகார்) காற்றின் தரம் – 351 AQI.

6. டெல்லி 326 காற்றின் தரம் – AQI.

7. லூதியானா (பஞ்சாப்) காற்றின் தரம் –  324 AQI.

8. சாப்ரா (பீகார்) காற்றின் தரம் – 322 AQI.

9. நொய்டா (உபி) காற்றின் தரம் – 322 AQI.

10. கிரேட்டர் நொய்டா (UP)  காற்றின் தரம் –  314 AQI.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.